முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      இந்தியா
MP 2025-08-12

Source: provided

புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாராளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி வருகிற 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த நிலையில், பாராளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நடந்தது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்தினார். இந்த நிலையில், அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம், தமிழகத்திற்கான கல்வி நிதியை அதிகரித்து வழங்குவது, டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதுபற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாள் முழுமைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்படி, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பாராளுமன்ற வளாக பகுதிகளில் நின்றபடி எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கார்கே நிருபர்களிடம் கூறும்போது, ஜனநாயகம் பாதுகாக்கப்பட மற்றும் அநீதிக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து