முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில உரிமைகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை மத்தியஅரசு நிறைவேற்றவேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

இந்தூர், மார்ச்.- 5 - குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மாநில உரிமைகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மோடி, மத்திய -மாநில உறவுகள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளையும் நீதிபதி மதன்மோகன் கமிஷன் பரிந்துரைகளையும் மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கருத்தரங்கில் அவர் பேசுகையில்,  மத்திய அரசானது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது. பொடா போன்ற சட்டங்கள் இருக்கும்போது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் எதற்கு? இத்தகைய அமைப்பு மூலம் மத்திய உளவுத்துறையானது மாநில அரசுகளை ஆதிக்கம் செலுத்துகிற நிலை உருவாகும். இது மாநிலங்களின் உரிமைகளை கொல்லைபுறம் வழியே பறிக்கக்கூடிய சதிச்செயல்தான். அதேபோல் மத்திய மாநில உறவுகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளையும், மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிசார் உறவுகள் தொடர்பான நீதிபதி மதன்மோகன் கமிஷன் அறிக்கையின்படி அரசியல்வாதிகளை கவர்னர்களாக நியமிக்ககூடாது. ஆனால் மத்திய அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, மாற்று கருத்துகளை கொண்ட அரசியல்வாதிகளையே கவர்னர்களாக நியமிக்கிறது. இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களிடையே கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை கூட்டவேண்டும். மதமோதல்கல் தொடர்பான மசோதாவும் கூட மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியதே. மதமோதல்கள் என்ற பெயரில்  மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக்கொள்ளும்  சதி என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்