முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தொகுதிக்கு ஜூன் 12-ம் தேதி இடைத்தேர்தல்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.25 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன்.12-ந்தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் அடுத்த மாதம் (மே) 18 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் முத்துக்குமார் கார் விபத்தில் மரணமடைந்தார். இதையொட்டி புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2012 மே மாதம் 18 ம் தேதி வெள்ளிக்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணி தொடங்கும். அதாவது தேர்தல் அறிவிக்கை அன்று வெளியிடப்படும். 

மே 25 ம் தேதி வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். மே 26-ந்தேதி சனிக்கிழமை வேட்பு மனுக்கள் ஆய்வு (பரிசீலனை) செய்யப்படும். மே 28 -ந்தேதி திங்கட்கிழமை வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி தேதியாகும். ஜூன் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 முதல் மாலை 5.00 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன்.15-ந்தேதி வெள்ளிக்கிழமை வாக்குகள் எண்ணப்படும். ஜூன் 18-ந்தேதியுடன் திங்கட்கிழமையுடன் தேர்தல் பணிகள் நிறைவடையும். 

தேர்தல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள ஏப்ரல் 24-ந்தேதிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் புதுக்கோட்டை தொகுதி உட்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிற்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதே போல் புதுக்கோட்டையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அ.தி.மு.க.வினர் இப்போதே சுறுசுறுப்போடு பணியாற்ற தொடங்கி விட்டார்கள். அனேகமாக அடுத்த மாதம் மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டுவதை போல புதுக்கோட்டையில் தேர்தல் திருவிழா களைகட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்