முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், மார்ச், - 30 - திருமங்கலம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி தி.மு.க. வேட்பாளருடன் அனுமதி பெறாமல் அணிவகுத்து வந்த தி.மு.க. பிரமுகர்களின் 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுயேட்சைகளை மனுதாக்கல் செய்ய வைத்து அவர்களுக்கென வழங்கப்படும் வாகன அனுமதி சீட்டுகளை தி.மு.க. வினர் பயன்படுத்தி வந்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம் என்பவரின் பவர் ஏஜென்டான கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், வாகன அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதேபோல் மேலும் 3 சுயேட்சை வேட்பாளர்களின் கார் பாஸ்கள் தி.மு.க. வினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் விதிமுறைகளை மீறிய கார்களில் பயணித்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், வாகன அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்திட உதவிய சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் முருகன் மற்றும் டிரைவர்கள் தண்டீஸ்வரன், லத்தீப் ராஜா, பாலு ஆகிய 7 பேர் மீதும் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. வி.ஐ.பி. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்