முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்காணிப்புக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.7 - சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி கண்காணிப்புக்குழு டெல்லியில் இன்று கூடுகிறது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்க வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு 9ம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு 24 மணிநேரத்தை தாண்டிவிட்டது. ஆனாலும் கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடவில்லை. முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் இன்று சீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்யப்போகிறதாம். தண்ணீரைத் திறந்து விடாமல் எந்த அளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்தடிப்பு வேலைகளை செய்து வருகிறது கர்நாடக அரசு. இதனை கண்டித்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று பந்த் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்