5-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி ஏன்? தோனி விளக்கம்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

தரம்சாலா, ஜன. 29 - இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சா லாவில் நடைபெற்ற 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான கார ணத்தை கேப்டன் தோனி விளக்கி இரு க்கிறார். இந்தக் கடைசி போட்டியில் இந்திய அணி முன்னதாக டாசை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்திய அணிக்கு எதிரான இந்த 5 -வது மற்றும் கடைசி ஒரு போட்டியில் இங் கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தி ல் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளு க்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்தது. இந்த வெற் றியின் மூலம் இந்தத் தொடர் 3 - 2 என் ற கணக்கில் முடிவடைந்தது. 

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணி 2,3 மற் றும் 4 ஆகிய போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி யது. 

தரம்சாலாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 227 ரன்னில் ஆட்டம் இழந்தது. ரெய்னா அதிகபட்சமாக, 82 ரன் எடுத்தார். 

பின்பு ஆடிய இங்கிலாந்து அணி 3 விக் கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது. இத னால் இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்ட த்தில் இயான் பெல் சதம் அடித்தது குறி ப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந் தது குறித்து கேப்டன் தோனி நிருபர்க ளிடம் கூறியதாவது - இந்த ஆடுகளம் துவக்கத்தில் வேகப் பந்து வீச்சிற்கு தோதுவாக இருக்கும். 

இதனை இங்கிலாந்து சரியாக பயன்ப டுத்திக் கொண்டதில் ஆச்சரியம் எதுவு ம் இல்லை. டாசை இழந்ததே தோல்வி க்கு முக்கிய காரணமாக கருதுகிறேன். 

தவிர, 30 முதல் 40 ரன்கள் வரை குறை வாக எடுத்து விட்டோம். இதனால் சுவிங் பந்தை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்களுக்கு இந்தப் போட்டி நல்ல பயிற்சியாக அமைந்தது. 

நாங்கள் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி 3 - 1 என்ற கணக்கில் முன் னிலை பெற்றோம். அஸ்வின் பந்து வீச்சு குறித்தும், காம்பீர் பேட்டிங் குறி த்தும் நான் அதிகம் கவலைப்படவில் லை. 

2015 - ம் ஆண்டு உலகக் கோப்பைக் கான இந்திய அணியை தேர்வுக் குழுவி னர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: