முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவு அணி 307 ரன்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், மார்ச். 15 - ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுன் நகரில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னைக் குவித் தது. மே.இ.தீவு அணி தரப்பில், கேப்டன் சம்மி, கீப்பர் ராம்டின் மற்றும் சாமு வேல்ஸ் ஆகிய 3 வீரர்களும் அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர்.  

அவர்களுக்கு பக்கபலமாக கெய்ல், சந் தர்பால் மற்றும் பெஸ்ட் ஆகியோர் ஆடினர். இதனால் அந்த அணி 300 ரன் னைத் தாண்டியது. 

மே.இ.தீவு மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்  

போட்டி பார்படோஸ் தீவில் பிரிட்ஜ் டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவ ல் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன் னிங்சில், 211 ரன்னில் சுருண்டது. அந்த அணி தரப்பில், துவக்க வீரர் மவோ யோ 50 ரன்னும், கேப்டன் டெய்லர் 26 ரன்னும், எர்வின் 29 ரன்னும், கிரமர் 25 ரன்னும், கீப்பர் சக்கப்வா 15 ரன்னும் எடுத்தனர். 

பின்பு பேட்டிங் செய்த மே.இ.தீவு அணி ஜிம்பாப்வே பந்து வீச்சை எளி தாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித் தது. 

இறுதியில் அந்த அணி முதல் இன்னிங் சில் 84.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சத ம் அடித்தனர். 

கேப்டன் டேரன் சம்மி அதிகபட்சமாக 69 பந்தில் 73 ரன் எடுத்தார். இதில் 8 பவு ண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இறு தியில் அவர் மசகட்ஜா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். 

அவருக்கு பக்கபலமாக ஆடிய கீப்பர் ராம்டின் 130 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். இறுதியி ல் அவர் சதாரா வீசிய  பந்தில் சிபாண்டாவிடம் கேட்ச் கொடுதது வெளியே றினார். 

சாமுவேல்ஸ் 74 பந்தில் 51 ரன் எடுத்தா ர். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மசகட்ஜா வீசிய பந்தில் கீப்பர் சக்கப்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

தவிர, துவக்க வீரர் கெய்ல் 76 பந்தில் 40 ரன்னையும், சந்தர்பால் 48 பந்தில் 26 ரன்னையும், பெஸ்ட் 24 ரன்னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில், ஜார்விஸ் 54 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடு த்தார். தவிர, சதாரா மற்றும் மசகட்ஜா தலா 2 விக்கெட்டும், பிரைஸ் 1 விக்கெ ட்டும் எடுத்தனர். 

பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம் பாப்வே அணி மே.இ.தீவு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. 

ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன்னிங்சில் 26 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன் னை எடுத்து உள்ளது. தற்போது 36 ரன் பின்னடைவில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்