ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 10 புக்கிகளுக்கு வலை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 20 - ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 6 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 தரகர்களுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். 

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ்ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து டெல்லியில் உள்ள சில தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இதுவரை டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பணம், லேப்டாப்கள், செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வரும் 9 அணிகளிலுமே சூதாட்டத்தில் ்ஈடுபட்ட வீர்ரகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சூதாட்டத்தல் கோடிக் கணக்கில் பணம் புழங்கப்பட்டிருப்பதும், அதில் கணிசமான தொகை கிரிக்கெட் வீரர்களுக்கு சென்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் 25 வீரர்கள் சூதாட்டத்தில் ்ஈடுபட்டிருக்கக்கூடும் என்று டெல்லி போலீசார் சந்தேகிக்கின்றனர். தாங்கள் சந்தேகப்படும் வீரர்களை அவர்கள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேக பட்டியலில் உள்ள 25 வீரர்களில் 6 பேர் தாங்கள் விளையாடிய போட்டிகளில் எல்லாம் சூதாட்டத்தில் ்ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அந்த 6 வீரர்கள் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது. 

இந்நிலையில் சென்னையில் இருந்து கொண்டே சூதாட்டத்தில் ்ஈடுபட்ட மேலும் 10 தரகர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தரகர்களை வலை வீசித் தேடி வருகின்றனர். மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 தரகர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் தீர்மானித்துள்ளனர். அவர்களை நாளை தங்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: