முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிவண்ணன் அவரது மனைவியும் காலமானார்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

சென்னை.ஆக.17 - நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி செங்கமலம் நேற்று (ஆகஸ்ட் 16ம் தேதி) காலமானார். தமிழ் சினிமாவில் 50 படங்களை இயக்கிய மணிவண்ணன் 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என்று பல்வேறு பரிமாணங்களில் நடிகராகவும் இருந்தார். கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென மாரடைப்பால் அவர் இறந்தார். மணிவண்ணனின் இறப்பு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அந்த சோகம் தீருவதற்குள் அவரது மனைவியும் நேற்று காலமானார்.
கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த செங்கமலம் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடல் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் பலர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்