முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் - வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டுப்பாடு குறைப்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை.அக்.1 - தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 40 சதவீத மின்கட்டுப்பாட்டினை, 20 சதவீதமாக குறைக்க முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் முதல்ரூஅமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தில் நிலவும் மின் நிலைமை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் இரா.வைத்திலிங்கம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் கு.ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச்செயலாளர் ஆர்.சண்முகம், உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, வேளாண்மைத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முதல்ரூஅமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, உயரழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக 14.8.2013 முதல் 30.9.2013 வரை தளர்த்தப்பட்ட நடவடிக்கையை தொழில் அமைப்புகள் பெரிதும் வரவேற்றுள்ளதையும், தென்மேற்கு பருவமழை நன்கு பெய்ததன் காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதையும், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம், தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 1,000 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டங்கள், 1,200 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளதையும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

தமிழ்நாட்டின் தற்போதுள்ள மின் நிலைமையையும், தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, 1.10.2013 முதல் உச்ச மின் தேவை நேரம் தவிர மற்ற நேரங்களில் உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு 40 விழுக்காடு மின் கட்டுப்பாட்டினை 20 விழுக்காடாக குறைக்க முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உச்ச மின் தேவை நேரங்களில் வீட்டு உபயோகத்திற்கு மின்சாரம் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச மின் தேவை நேரங்களில் உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அவர்கள் தேவையில் 10 விழுக்காட்டிற்கு மிகாமல் பயன்படுத்த தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கை தொழில் வளம் பெருகவும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்