முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம்: இந்தியாவுக்கு உதவ உறுதி

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூரு, அக்.8 - செவ்வாய் கிரகத்துக்கு  இந்தியா அனுப்ப உள்ளஆராய்ச்சி விண்கலத்திற்குத் தேவையான தகவல் தொடர்பு மற்றும் விண் பயணத்தில் உதவுவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) மீண்டும் உறுதி அளித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள விண்கலம் வரும் 28_ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து அனுப்ப நிபுணர் குழு ஒப்புதல் அளித்திருந்தாலும், அடுத்த மாதம் 19_ம் தேதிக்குள் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

விண்கலத்தில்  தகவல் தொசர்பு மற்றும் விண் பயணத்தில் உதவுவதாக நாசா ஏற்கெனவே உறுதியளித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக அங்குள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும்  இந்திய விண்கலத்துக்கு நாசா உதவி செய்யுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்கலத்துக்கு அமெரிக்காவின் நாசா ஜேபிஎல் நிறுவனம் ஆகியவை தகவல் தொடர்பு மற்றும் விண் பயணத்தில் உதவுவ தாக ஏற்கெனவே அளித்திருந்த உறுதியில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்திய விண்கலத்துக்கு அளிக்கப்படும் உதவியில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்று நாசா மீண்டுமந் உறுதியளித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்