முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் நலக்குறைவு: ரஜினி மீண்டும் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, 15 - ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த விபரம் வருமாறு:- ரஜினி எற்கனவே இரண்டு முறை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ராணா படப்பிடிப்பின் போது அஜீரண கோளாறு ஏற்பட்டது. உடனடியாக இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அன்று மாலையே டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். கடந்த 4​ந்தேதி மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சல், இருமல் இருந்தது. 

அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 7 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். பின்னர் உடல் நிலை சீரானது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். முன்னதாக பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமி ஆலயங்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். ஓரிரு நாட்கள் வீட்டில் தங்கி ஒய்வு எடுத்து வந்தார். 

நேற்று முன்தினம் ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி பரவியது. இதற்கு அவரது மனைவி லதா மறுப்பு தெரிவித்தார். ரஜினி நலமுடன் இருப்பதாக கூறினார். இந்த நிலையில் நேற்று ன்தினம் இரவு ரஜினிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சலும் காலில் வீக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony