முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதாப் ரெட்டியின் நூல் பிரணாப் முகர்ஜியிடம் வழங்கப்பட்டது

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.27- இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம்  ராஜ்பவனில் ஆந்நிர ஆளுநர் மேதகு இ எஸ் எல் நரசிம்மன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவனைக் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி வாழ்க்கை வரலாற்று நூல் வழங்கப்பட்டது. 

பன்னாட்டு பத்திரிக்கையாளரும், வரலாறு மற்றும் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியருமான பிரணாய் குப்தே 'ஹீலர் _ டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி அண்ட் தி டிரான்ஸ்டிபார்மேஷன் ஆடிப் இந்தியா' என்ற தலைப்பில் அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார். 600 பக்கங்கள் அடங்கிய இந்நூலை உலகின் மிகப் பெரிய புத்தக நிறுவனமான பென்குவின் அச்சிட்டு வெளியிட்டுள்ளாது. இரு ஆண்டுகள் கடுமையான உழைப்பின் பயனாக டாக்டர் ரெட்டியின் 80_ஆவது மற்றும் அப்போலோ மருத்துவமனையின் 30 ஆண்டு விழாக்களைக் கொண்டாடும் வகையில் இந்நூல் வெளியாகி உள்ளது. 

புத்தகத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பரிசளித்துப் பேசுகையில் 'இந்தியச் சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் குடியரசுத் தலைவருக்கு நீண்ட காலமாகவே கணிசமான பங்களிப்பு இருக்கிறது. நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை முழுமையாக மாற்ற வேண்டிய அவசரமான அவசியத்தை உணந்துள்ளார்.  முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகிய பிரணாப் முகர்ஜி சமூகத்தின் சுகாதாரக் கேடுகள் அதன் உற்பத்தித் திறனைப் பாதிக்கும் என்பதையும் நன்கு அறிந்துள்ளார்' எனப் பாராட்டினார். 

அரகோண்டா தொடங்கிச் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து, அமெரிக்காவில் பிரபல இதய மருத்துவராக விளங்கிப் பின்னர் 50 ஆவது வயதில் தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்யத் தாய்நாட்டில் மருத்துவமனையை நிறுவி உலகப் புகழ் பெற்றது வரையிலான நீண்ட நெடிய பயணத்தை டாக்டர் பிரதாப் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல் விவரிக்கிறது. உலகத் தரத்திற்கு இணையான ஸ்டேட் ஆடிப் தி ஆர்ட் மருத்துவமனையை நிறுவியதன் மூலம் வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய மருத்துவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப இவரது முனைவு வழிவகுத்தது .ஆசியாவின் முன்னணி மருத்துவனை என்பதுடன் இதயம், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில் உலகளவில் பல சாதனைகளை முதன் முதலில் படைத்த பெருமையும் அப்போலோவிற்கு உண்டு.

அடுத்த சில வாரங்களில் டாக்டர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னை, புதுடெல்லி, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் முன்னணி புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் விமான நிலங்களில் இந்நூல் விற்பனைக்கும் கிடைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்