முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்துக்கு இலங்கை அணி பதிலடி கேப்டன் தில்ஷான் 193 ரன் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். - 7 - இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டனில் நடந்து வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பதிலடி கொடுத்து வருகிறது. இரு அணிகளும் போட்டி போட்டு ரன்னைக் குவித்து வருகின்றன.  இலங்கை அணியின் 2 -வது இன்னிங்சில் கேப்டன் தில்ஷான் பொறுப் புடன் ஆடி 193 ரன்னைக் குவித்து இருக்கிறார். இது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவர் 7 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவ விட்ட து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  இதனால் இலங்கை அணி 400 ரன்னைத் தாண்டி சவாலான ஸ்கோரை எட்டியது. பரணவிதானா, ஜெயவர்த்தனே, கீப்பர் பிரசன்னா ஜெயவ ர்த்தனே ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும், கேப்ட ன் தில்ஷான் தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையே டெஸ் ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி லண்ட னில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 3 - ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இன்று ஆட்டத்தின் 4 - வது நாளாகும். 

இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய இங்கிலாந்து அணி 112.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 486 ரன்னைக் குவித்தது. இதில் ஒரு வீரர் சதமும், 4 வீரர்கள் அரை சதமும் அடித்தனர். 

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரையர் அதிகபட்சமாக 131 பந்தில் 126 ரன்னை எடுத்தார். துவக்க வீரர் குக் 164 பந்தில் 96 ரன்னை எடுத் தார். தவிர, மார்கன் 128 பந்தில் 79 ரன்னையும், பெல் 106 பந்தில் 52 ரன்னையும், பிராட் 51 பந்தில் 54 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி தரப்பில், வெலிகேடரா 122 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். லக்மல் 126 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, ஹெராத் 2 விக்கெட்டையும், பெர்னாண்டோ 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய இலங்கை அணி இங்கிலாந்துக்கு பதிலடி கொ டுத்து வருகிறது. 4 - வது நாள் மதியம் தேனீர் இடைவேளையின் போ து, அந்த அணி 126 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 461 ரன்னை எடுத்து இருந்தது. 

இலங்கை அணியின் இன்னிங்சில் கேப்டன் தில்ஷான் 253 பந்தில் 193 ரன் குவித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். 433 நிமிட நேரம் களத்தி ல் இருந்த அவர் மொத்தம் 20 பவுண்டரியையும், 2 சிக்சரையும் அடித் தார். இறுயில் அவர் பின் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். 

தவிர துவக்க வீரர் பரணவிதானா 184 பந்தில் 65 ரன்னை எடுத்தார். ஜெயவர்த்தனே 84 பந்தில் 49 ரன்னையும், சங்கக்கரா 93 பந்தில் 26 ரன் னையும் எடுத்தனர். கீப்பர் பிரசன்னா 39 ரன்னுடனும், ஹெராத் 21 ரன் னுடனும் களத்தில் இருந்தனர். 

முன்னதாக இலங்கை அணி 2 -வது நாளன்று மதிய உணவு இடைவே ளைக்குப் பிறகு முதல் இன்னிங்சை துவக்கியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி 63 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 231 ரன்னை எடுத்து இருந்தது. 

பின்பு 2 -வது நாள் ஆட்டநேர முடிவில், 102.2 ஓவரில் 3 விக்கெட் இழ ப்புக்கு 372 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது ஜெயவர்த்தனே 40 ரன்னுடனும், சமரவீரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

2 - வது நாள், 3 -வது நாள் மற்றும் 4 -வது நாளில் இடைஇடையே மழை பெய்ததால் இலங்கை அணியின் இன்னிங்ஸ் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் போட்டி தற்போது டிராவை நோக்கி செல்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்