முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.15 - சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை தொடரட்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் கடந்தாண்டு 1 முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமுல்படுத்தப்பட்டது. இந்த கல்வி முறை தரமானதாக இல்லை என்று கூறி சமச்சீர் கல்வி பாடத் திட்டமுறையை தமிழக அரசு இந்தாண்டு மட்டும் நிறுத்திவைத்தது. இந்தாண்டு பழைய பாடத்திட்டமே அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்தாண்டு 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டம் தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று 2 நீதிபதி செளகான் உள்பட 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணயின்போது வாதி, பிரதிவாதி சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்தாண்டு 1 முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். 7 முதல் 10-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறித்து இறுதி செய்ய தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு இரண்டு வார காலத்திற்குள் அமுல்படுத்தப்படும் பாடத்திட்ட அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை தொடர்பாக ஐகோர்ட்டு ஒரு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் அதுவரை 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை எந்த பாடத்திட்டத்தையும் பின்பற்றக்கூடாது என்றும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்