முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வரும் ஹிலாரி முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 17 - வருகிற 19 ம் தேதி  இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்த இருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி  இந்தியாவுக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு  சம்பவங்களை நடத்தியுள்ளனர்.

இதற்கு  கடும்  கண்டனம் தெரிவித்துள்ள ஹிலாரி கிளிண்டன்  தனது இந்திய சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும்  தான் திட்டமிட்டபடி இந்தியா வர இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

வருகிற 19-ம் தேதி இந்தியா வரும் ஹிலாரி கிளிண்டன், பிரதமர் மன்மோகன்  சிங்,  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட இந்திய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர், உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய தலைவர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார்.

இந்த பேச்சுவார்த்தை ஒரு வியூக பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை  தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு உதவி  செய்ய தயார் என்று ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இரு நாட்டு  உறவுகள், சர்வதேச பிரச்சினைகள் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும்  இந்திய தலைவர்களுடன் ஹிலாரி பேச்சு  நடத்துவார்.

இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஹிலாரி பங்கேற்க உள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக  செயல்படும் தீவிரவாத குழுக்களை ஒழிப்பது குறித்தும் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள  வர்த்தக உறவுகள் குறித்தும் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!