முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 20 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை. 20 - டெல்லியில் அமெகிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரு நாட்டு உறவுகள் தொடர்ந்து சுமுகான நிலையில் உள்ளன. 

இந்த உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் முகமாக அமெரிக்க நிதி அமைச்சர் டிம் ஜீய்த்னரை இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரு முறை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதே போல அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜேனட் நெப்போலிடெனோவை இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருக்கிறார். 

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிலிண்டன் நேற்று முன்தினம் இரவு இநதியாவில் அரசு முறை சுற்றுப்பயணமாக டெல்லி வந்து சேர்ந்தார். அவரை இந்திய அதிகாரிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தேசிய புலனாய்வு துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், அமெரிக்க அறிரியல் மற்றும் தொழில்நுட்ப துறை தலைவரின் உதவியாளர் ஜான் ஹோல்ட்ரன் , அமெரிக்க எரி சக்தி துறை துணை அமைச்சர் டேனியல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் ஹிலாரியுடன் இந்தியாஏ வந்துள்ளனர்.

நேற்ற டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவம் அமெரிக்க  வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் முக்கிய பேச்சு நடத்தினார்கள்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பு, ஆக்கப்பூர்வ அணு சக்தி பொறுப்புடைமை சட்டம், புதிய அணு சத்தி பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறி முறைகள், அன்னியநேரடி முதலீடு வரம்பு, அவுட்சோர்சிங்,  ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தானில் நிலைமைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இவர்கள் இவரும் விவாதம் நடத்தினார்கள்.

இவர்கள் இருவரும் சந்தித்து பேசுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே இவர்கள் இருவரும் வாஷிங்டனில் சமீபத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதிநிதிகள் குழுவில் மத்திய திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பிரதமருக்கான ஆலோசகர் சாம் பிட்ரோடா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், நிருபமா ராவ் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் அந்த பதவியை ஏற்க இருக்கும் ரஞ்சன் மத்தாய்  உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு  இநதிய தலைவர்களையும் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்