முக்கிய செய்திகள்

ஈராக்கில் குண்டுவெடிப்பு 66 பேர் உடல் சிதறி பலி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

குத்(ஈராக்),ஆக.- 17 - ஈராக்கின் வடக்கு நகரான குத் பகுதியில் இரு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 66 பேர் இறந்தனர்.  குத் நகரின் மத்திய பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சக்திவாய்ந்த குண்டும், சாலையில் கிடந்த மற்றொரு குண்டும் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதில் அதே இடத்தில் 40 பேர் பலியானார்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக மாறி விட்டது. தொடர்ந்து என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றனர் அப்பகுதியில் உள்ளோர்.  சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 3 போலீசார் உட்பட 26 பேர் பலியாயினர். இந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாராளுமன்ற தலைவர் ஓஸ்மான் அல் நுஜாபி பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியே இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: