முக்கிய செய்திகள்

மத்திய அமைச்சர் கிருஷ்ணாவுடன் ஹிலாரி தொலைபேசியில் பேச்சு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஆக.- 20 - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியா நாட்டு நிலைமைகள் குறித்து விவாதித்தார். சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரியா அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உள்நாட்டு போரில் ஏராளமான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளன. பல்ராயிரக்கணக்கான சிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த சிரிய நிலைமை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று 12 க்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். குறிப்பாக இந்தியா, கத்தார், பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நார்வே நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஹிலாரி தனித்தனியாக பேச்சு நடத்தினார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் அவர் வாஷிங்டனில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சிரியா நாட்டு பிரச்சனையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஹிலாரி பேசினார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்தை வழங்குவது குறித்தும் கிருஷ்ணாவிடம் ஹிலாரி கிளிண்டன் பேசியதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: