முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் - ஒத்திவைப்பு

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.7  - குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ. உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் எழுப்பு கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றும் இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை கவர்னர் கமலா நியமித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில கவர்னரின் இந்த செயல் ஜனநாயகம், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கோரி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் எல்.கே. அத்வானி தலைமையில் பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து மனுவும் கொடுத்தனர். பாராளுமன்றத்திலும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடந்த 5 நாட்களாக எழுப்பி பிரச்சினை வருகின்றன. இதனால் இரு சபையிலும்  ஏற்படும் கூச்சல் குழப்பத்தையொட்டி அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால் ராஜ்யசபையில் நேற்று 4-வது நாளாக குஜராத் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட பிரச்சினையை பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுப்பினர். குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். கவர்னர் கமலா பெனிவாலை திரும்பப்பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினர்.  இவர்களுக்கு அ.தி.மு.க., சிவசேனா, பிஜூ ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளமுடியாமல் நேற்று மதியம் 12 மணி வரை முதல் தடவையாக ராஜ்யசபை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டு குழுவில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்புவது தொடர்பாக மத்திய அரசின் தீர்மானம் தொடர்பாக அப்போது சபையில் இருந்த கே.ரகுமான் கானிடம் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ். வி மைத்ரேயன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் அலுவாலியா ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் சுதர்ஸன் நாச்சியப்பன் மற்றும் இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர்களை தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கொண்டுவந்தார். அதன் பிறகு பேசிய அலுவாலியா, இந்த தீர்மானத்தில் தவறு உள்ளது என்றார். ஏற்கனவே இதுதொடர்பாக திருத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றார். காலி இடத்தை நிரப்புவதற்கு தனித்தனியாக 2 தீர்மானங்கள் கொண்டு வரத்தேவையில்லை என்றும் கூறினார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையொட்டி நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் தொடங்கியும் கூச்சல் குழப்பம் நிலவியதால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபை நேற்று கூடியதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுந்து குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும் பிரச்சினையை எழுப்பினர். நரேந்திர மோடியை ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலையாகும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அர்ஜூன் ராம் மெஹ்வால், சரோஜ் பாண்டே, கணேஷ் சிங், சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் குஜராத் கவர்னர் கமலா பெனிவாலை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. அதனால் மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி உறுப்பினர்கள் கோரினர். இந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் அகிலேஷ் யாதவ் சபையின் மத்திய பகுதிக்கு சென்று மாயாவதி ஊழல்வாதி என்பது தெளிவாகிவிட்டது. உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர் ஊழல்வாதி என்று விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது என்று கோஷமிட்டார். அதற்கு பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர் தாரா சிங் செளகான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கிடையே கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள சபாநாயகர் மீரா குமார் முயன்றார். ஆனால் கூச்சல் குழப்பம் நீடித்துக்கொண்டியிருந்தது. அதனால் சபை நேற்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்