முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச காட்சிகள் ஒளிபரப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, நவ.3 - தொலைகாட்சிகளில் வன்முறை ஆபாச காட்சிகள் ஒளிபரப்புவது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: 

சமீபகாலமாக தொலைகாட்சி சேனல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதில் போட்டி கொண்டு பல கவர்ச்சி நிகழ்ச்சிகள் வன்முறைகளை தூண்டும் காட்சிகள் ஆபாச விளம்பர பகுதி காட்சிகள் என்று காண்பித்தவண்ணம் உள்ளனர். இது வரை முறையின்றி, ஒழுங்குமுறையற்ற நிலையில் உள்ளது. இதை நெறிபடுத்த ஒரு அமைப்பு தேவை என்று, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வாசன் என்ற சக்தி வாசன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

தூர்தர்ஷன் உள்பட 55 தொலைகாட்சி செனல்கள் உள்ளது. இந்த தொலைக்காட்சி செனல்கள் எல்லாம் டி.ஆர்.பி. ரேட் விகிதத்திற்க்காக - போட்டி போட்டு கொண்டு அதிக வேறுபாடான புது பது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் தகாத வார்த்தைகள் உபயோகிப்பு - வன்முறை காட்சிகளின் ஆதிக்கம். நாகரிக சீர்கேடு, கலாச்சார மாற்றம் இது போன்ற காட்சியமைபின் காரணத்தால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

குழந்தைகளின் மென்மையான மனநிலை மாற்றம் அடைய செய்கிறது. இளைஞர்களின் எதிர்கால முற்போக்கு சிந்தனைகளுக்கு தொலைகாட்சி வரைமுறையற்ற நிகழ்ச்சிகளால் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள தொலைகாட்சி சேனல்களில் வயது சம்மந்தபட்ட சான்றிதழ் காட்சிகளை ஒளிபரப்பபடுகிறது. ஆகையால் தொலைகாட்சி செனல்களில் ஒழுங்குமுறைகளையும் விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றால் சேனல் கண்காணிப்பு ஒழுங்குமுறை அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும். என்று மத்திய அரசுக்கு உத்தரவிடகோரி உத்தரவு இட வேண்டும். என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனுவில் விசாரணை நேற்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போழுது நீதிபதிகள் மத்திய அரசு ஒளிபரப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்