முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுதப்படை சிறப்பு சட்டம் குறித்து காங். தெளிவுபடுத்த வேண்டும் - பா.ஜ.க.

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, நவ. 14- ஆயுதப்படை சிறப்பு பாதுகாப்பு சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று காஷ்மீர் மாநில பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாதம், நக்சல்வாதம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஆயுதப்படை  சிறப்பு பாதுகாப்பு சட்டம் அமுலில் உள்ளது. 

இந்த சட்டம் காஷ்மீர் மாநிலத்திலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த  சட்டத்தை நீக்க வேண்டும் என்று  காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கோரி வருகிறார். ஆனால் இது குறித்து  மத்திய அரசு இன்னும் தீர்க்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று  காஷ்மீர் மாநில பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்த சட்டத்தை நீக்குவது குறித்து காங்கிரஸ் கட்சி இரட்டை நாக்குடன் செயல்பட்டு வருகிறது என்றும், இது குறித்து அக்கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் காஷ்மீர் மாநில பா.ஜ.க.  மகளிர் மோர்ச்சா  தேசிய தலைவர்  ஸ்மிர்த்தி இராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சட்டம் குறித்து டெல்லியில் ஒரு மாதிரியும், காஷ்மீரில் ஒரு மாதிரியும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து வருகிறது  என்றும் இது குறித்து தெளிவான நிலையை அக்கட்சி விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இருந்தால் இது குறித்து தெளிவான நிலையை காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் இந்த சட்டத்தை நீக்கப்போவதாக காஷ்மீர் முதல்வர் அப்துல்லா அறிவித்துள்ளதற்கு இரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லாவின் கருத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆமோதித்துள்ளது வியப்பை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். காஷ்மீரில் மூக்கை நுழைப்பதற்கு பதிலாக மேற்கு வங்காள மருத்துவ மனைகளில் ஏற்படும் மரணங்கள் குறித்து  ஆசாத் தனது கவனத்தை  செலுத்தலாம் என்றும் இராணி கிண்டலடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்