முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிர்ஸ்பேன் : ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் சேர்த்தன. 

2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 294 ரன்னில் ஆல்அவுட் ஆக முகமது சிராஜின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 19.5 ஓவர்கள் வீசிய அவர் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதில் லாபஸ்சேன், ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும். 

இந்தத் தொடரில் முகமது சிராஜ் வழக்கமான மற்ற வீரர்களை போன்று சாதாரண சூழ்நிலையில் விளையாடவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் அவரது தந்தை காலமானார். அவரது இறுதி சடங்கிற்குக்கூட வரவில்லை. தந்தையின் இழப்பு அவரை மிகப்பெரிய அளவில் பாதித்தது. 

தொடரை வென்று தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன் எனக் கூறினார். மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இந்த நிலையில்தான் தற்போது பிரிஸ்பேன் டெஸ்டில் ஐந்து விக்கெட் சாய்த்துள்ளார். இந்தத் தொடரில் ஐந்து விக்கெட் வீழ்த்தி ஒரே பந்து வீச்சாளர்கள் இவர்தான். 

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிந்த பின்னர் முகமது சிராஜ் கூறுகையில் ‘‘தற்போது எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் சந்தோசம் அடைந்திருப்பார். ஆனால் அவரது ஆசிர்வாதத்தால் தற்போது ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளேன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து