முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவோம் - மம்தா பானர்ஜி பேச்சு

திங்கட்கிழமை, 3 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : முதலில் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவோம் என்று மம்தா பானர்ஜி பேசினார்.

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. 

ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆட்சியை தக்கவைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்தார். 

அப்போது மம்தா பேசியதாவது

நான் ஒரு தெரு போராளி. மக்களை என்னால் ஊக்கப்படுத்த முடியும். அப்பொழுதுதான் நாம் பா.ஜ.க.வுக்கு எதிராக போராட முடியும். 2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட முடியும் என்று நான் நினைக்கிறேன். கொரோனா வைரசை எதிர்த்து முதலில் போராடுவோம். 

வன்முறை தொடர்பாக பா.ஜ.க. பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதுதான் அவர்களின் பழக்கம். நான் வன்முறையை விரும்புவதில்லை. பா.ஜ.க. இதை ஏன் செய்கிறது? பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பிறகும் நாங்கள் எந்த வித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை என்றார். மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி அமோக வெற்றி பெற்றாலும் நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் இதை எதிர்த்து தாம் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து