முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவு தள்ளிவைப்பு: மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      விளையாட்டு
Wrestler 2023-05-30

Source: provided

ஹரித்வார் : பதக்கங்களை கங்கையில் வீச விடாமல் தடுத்த விவசாய சங்கத்தலைவர்: மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு..!

தொடர் போராட்டம்...

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர்.

பதக்கங்களை கங்கையில்...

மேலும், மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர்.

தடுத்து நிறுத்தினார்...

இதற்காக டெல்லியில் இருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கங்களுடன் உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் பதக்கங்களை கங்கை நதியில் வீச இருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தினார். மேலும், வீரர், வீராங்கனைகளின் பதக்கங்களை அவர் தன்னோடு எடுத்து சென்றார்.

5 நாட்கள் கெடு... 

இதனை தொடர்ந்து பதக்கங்களை கங்கையில் வீசும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து