முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு டூடூலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      உலகம்
Google 2023-09-27

Source: provided

கலிபோர்னியா : உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் நேற்று தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடியது. இதனையொட்டி சிறப்பு டூடுலை(கவன ஈர்ப்பு சித்திரம்) வெளியிட்டுள்ளது. 

மக்களின் தினசரி பயன்பாட்டில் கூகுளுக்கு முக்கியப்பங்கு உண்டு. எதை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாலும் அதற்கு முதல் நுழைவாயிலாக இருப்பது இந்த தேடுபொறி தளம் தான். அவ்வளவு பிரசித்தமான கூகுள் தனது 25-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியது. 

லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகிய இருவரால் கடந்த 1998-ல் இதே நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கூகுள், உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பயனாளர்களைப் பெற்றுள்ளது. 

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கூகுள் வரைபடம் மூலம் உலகிற்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் பயணித்ததற்காக பயனர்களுக்கு நன்றி. எதிர்காலம் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூகுள் டூடுல் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து