முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை தக்காளி

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

முட்டை தக்காளி செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை - 5
  2. பட்டர் - 2 ஸ்பூன்.
  3. எண்ணெய் - 2 ஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய சிகப்பு குடைமிளகாய் - சிறிதளவு.
  5. வட்டமாக நறுக்கிய தக்காளி - 7 துண்டுகள்.
  6. ரெட் சில்லி பவுடர் - ஒரு சிட்டிகை.
  7. ஆர்கனோ  - ஒரு சிட்டிகை.
  8. மிளகு தூள் -1/2  ஸ்பூன்.
  9. சில்லி பிளக்ஸ் - சிறிதளவு.
  10. கொத்தமல்லி - சிறிதளவு.
  11. சீஸ் - சிறிதளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி  5 முட்டைகளை போட்டு நன்றாக வேக வைத்து முட்டை ஓடுகளை நீக்கி சுத்தம் செய்து முட்டையை பாதியாக அறுத்து  வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து  2  ஸ்பூன் பட்டர் மற்றும் 2  ஸ்பூன்  எண்ணெய்யை ஊற்றவும்.
  3. பட்டர் மற்றும்  எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய  சிறிதளவு சிகப்பு குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் வட்டமாக நறுக்கிய 7 தக்காளி துண்டுகளை கடாயில் வரிசையாக வைககவும்.
  5. தக்காளி துண்டுகள் மேல் வேக வைத்து பாதியாக அறுத்து வைத்துள்ள முட்டைகளை வைககவும்.
  6. முட்டைகள் மேல் ஒரு சிட்டிகை ரெட் சில்லி பவுடர்,ஒரு சிட்டிகை ஆர்கனோ,மிளகு தூள் 1/2  ஸ்பூன்,சில்லி பிளக்ஸ் 1/4  ஸ்பூன் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை போட்டு சிறிதளவு சீஸை துருவி  போட்டு கடாயை மூடி போட்டு மூடி சிறிது நேரம் வேக வைககவும். 
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான முட்டை தக்காளி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago