முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      உலகம்
drone 2024-04-29

Source: provided

கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

உக்ரைன், ரஷியா இடையேயான போர் நேற்று 1 ஆயிரத்து 86வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷிய அதிபருடன் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேவேளை, தங்கள் கருத்துக்களை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இதனிடையே, உக்ரைனின் கீவ் மாகாணத்தில் செர்னோபெல் அணு உலை உள்ளது. இந்த அணு உலையில் கடந்த 1986ம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அணு உலையில் இருந்து வெளியேறிய அணு கசிவால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அணு கசிவு பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து அணு உலை மூடப்பட்டது. ஆனாலும், அணு உலையில் இருந்து கதிரியக்கம் தொடர்ந்து வெளியேறிய நிலையில் அதை தடுக்க இரும்பு சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செர்னோபெல் அணு உலை மீது ரஷியா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து