முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

பாட்னா: பீகாரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித் யாதவ் மற்றும் விகல் யாதவ் ஆகிய இருவரிடையே தண்ணீர் குழாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென இருவரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விகல் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜகஜித் யாதவ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து