முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

சென்னை :  தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

அதன்படி,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தார்.

மேலும் அவர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ரூ.57 கோடி மதிப்பீட்டில், மன்னார்குடி, மலைக்கோட்டை, சிதம்பரம், திருஉத்திரக்கோசமங்கை, திருவிடந்தை, சமயபுரம், மேல்மலையனூர், திருவிடைமருதூர், காளையார் கோவில் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செல்லும் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.

ரூ.490 கோடி மதிப்பீட்டில் இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு மின் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் பயன்பெறும் வகையில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள மருந்தகங்கள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரூ.215 கோடி மதிப்பீட்டில் 18 புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 55 கோடி மதிப்பீட்டில், 26 துணை மின் நிலையங்களில் (33/11 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையம்–I, மேட்டூர் அனல் மின் நிலையம்–II, வட சென்னை அனல் மின் நிலையம்-I மற்றும் வட சென்னை அனல் மின் நிலையம்-II ஆகியவற்றில் உள்ள பல்வேறு உபகரணங்களில் மூலதனப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ. 111 கோடி மதிப்பீட்டில் வழுதூர் எரிவாயு மின் நிலையம் – I (95 மெகாவாட்) சுழலியின் வெப்ப எரிவாயு பாதை ஆய்வு மற்றும் உலர்ந்த நைட்ரஜன் ஆக்சைடு (DLN) கட்டுப்படுத்தும் அமைப்பின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். காடம்பாறை (4x100 மெகாவாட்) நீரேற்று புனல் மின் நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, எஞ்சிய ஆயுள் மதிப்பீட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

ரூ.1,192 கோடி மதிப்பீட்டில், ஒரு புதிய 400 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் 11 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.94 கோடி மதிப்பீட்டில், 25 துணை மின் நிலையங்களில் (110 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, பயிற்சி மையங்கள் மூலம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

திறன் மிகு மின் கட்டமைப்பு செயல்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு  மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தரவு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்  ஒரு சிறப்பு தரவுப் பகுப்பாய்வு பிரிவை உருவாக்கும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து