முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27ல் தொடங்கும்: வானிலை மையம்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Weather-Center 2 2025-02-28

Source: provided

சென்னை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.

இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய மேற்கு மற்றும் அதற்கு ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல பகுதி நிலவுகிறது. எனவே வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இன்று (நேற்று) காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

தமிழக கடலோர பகுதிகளுக்கு தென் தமிழக கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மீனவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை 27ஆம் தேதி என தொடங்கும், அதன் பிறகு ஒரு சில நாள்களில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 19 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 19 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து