முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்: ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      உலகம்
mohammad-yunus

டாக்கா, வங்கதேசத்தில் தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், அனைத்து கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்கவில்லை என்றால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். 

அதிகாரத்தை தக்கவைக்கும் வகையில் போராட்டத்தை தூண்டுவதற்கான ஒரு சூழ்ச்சியாக யூனுஸின் ராஜினாமா வதந்தி பார்க்கப்படுகிறது. வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் தலைமையிலான போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறி, ஆகஸ்ட் 5, 2024 அன்று பிரதமர் ஹசீனா டாக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பதவியை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டார். 

இந்த சூழலில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முக்கிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி போராட்டங்களில் குதித்துள்ளது. இதனையடுத்து அனைத்து தரப்பின் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில், வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். 

இதற்கு எதிராக யூனுஸுக்கு ஆதரவு தெரிவித்து, டாக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு அணிவகுத்துச் செல்லவும் மாணவர் தலைவர்களும், இளைஞர்களையும் திரட்டும் பணியை தொடங்கியுள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, பேரணியில் இணைய வேண்டும் என சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை சிலர் தொடங்கியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து