முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட் டே திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      சினிமா
Good-Day-Review 2025-06-30

Source: provided

உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர். தன் அம்மாவுக்கு பணம் கொடுப்பதை அலட்சியப்படுத்தும் மனைவி, நியாயத்தை கேட்டால், வீட்டை காலி செய்ய சொல்லும் வாடகை வீட்டின் உரிமையாளர் இத்தனை அவமானங்களையும் மறக்க வேண்டும் என்பதற்காக மது அருந்துகிறார் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம்,. மது ஆரம்பத்தில் ஆனந்தத்தை கொடுத்தாலும், சில மணி நேரங்களில் அவரை சிக்கலில் சிக்க வைக்கிறது. இப்படி போதை ஆசாமிகள் எப்படி எல்லாம் தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கும் படமே குட் டே. கதையை உணர்ந்து அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம்.  மைனா நந்தினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் அசத்துகிறார்.  ஆடுகளம் முருகதாஸ் வரும் காட்சிகள் அருமை.  காளி வெங்கட், பகவதி பெருமாள், வேல ராமமூர்த்தி என அனைவரும் எதார்த்தை நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். பூர்ணா ஜெஸ் மைக்கேலின் திரைக்கதை மற்றும் வசனம் மது பிரியர்களுக்கான அறிவுரையாக அல்லாமல், அவர்களின் உளவியல் பிரச்சனைகளை பேசக்கூடியதாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில், மது குடிப்பதால் ஒரு ‘குட் டே’ ‘பேட் டே’ ஆகிவிடும் என்பதை எதார்த்தமாக சொல்லியிருக்கிறது இப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து