முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்விக்-சிராக் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      விளையாட்டு
18-Ram-98-1

Source: provided

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீன தைபேயின் சாங்-கோ சீ-போ-லீ வெய் ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 25-23, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

ஆஸி.வீரர் மிட்செல் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி முடிவடைந்தது. அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் மிட்செல் 2-வது போட்டியில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஒருநாள் தொடரில் இருந்தே அவர் விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்க்வாட்டுக்கு திடீர் ஆதரவு

முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து நான்கு ரன்கள் அடித்திருந்த நிலையில் கழுத்து வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். தற்போது சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறதுகில் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது 4-வது இடத்தில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் மிரட்டி வரும் ருதுராஜ் அணியில் இடம் பெற வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ருதுராஜ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரசிகர்களும் ருதுராஜ்-க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களி ருதுராஜ் டிரெண்ட் ஆனார்.

பாபர் அசாமுக்கு அபராதம்

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் அசாம் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் கோபத்தில் ஸ்ட்ம்ப்பை தனது பேட்டால் அடித்தார். இது ஐ.சி.சி. விதிமுறையை மீறிய குற்றமாகும். இது குறித்து கள நடுவர்கள் ஐ.சி.சி. -யிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.சி.சி., பாபர் அசாமுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கி தண்டனை விதித்துள்ளது. 

சின்னருக்கு ரூ.45 கோடி பரிசு

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் உலகின் ‘நம்பர் 1’ வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீரர் ஜானிக் சினெரும் (இத்தாலி) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சினெர் 7-6 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் அல்காரசை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.  சாம்பியன் பட்டம் வென்ற சினெர் மொத்தம் ரூ.45 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். 2-வது இடத்தை பிடித்த அல்காரஸ் ரூ.24 கோடி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து