முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பண்ட்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2025      விளையாட்டு
Rishabh-Pant-2025-11-27

மும்பை, தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி அடைந்த தோல்விக்கு நாட்டு மக்களிடம் கேட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கோரியுள்ளார்.

படுதோல்வி... 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

விரும்புகிறோம்...

இந்நிலையில் நாட்டு மக்களிடம் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் விரும்புகிறோம்.

ஆதரவுக்கு நன்றி...

இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு உங்களை கற்றுக்கொள்ளவும், மாற்றியமைக்கவும், வளரவும் கற்றுக்கொடுக்கிறது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை. ஒரு வலுவான அணியாக கம்பேக் கொடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. என ரிஷப் பண்ட் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து