முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் கடத்தல்: நடப்பாண்டில் மட்டும் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      உலகம்
Thuku

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு 22 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 17 பேருக்கு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிக கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. போதைப்பொருள் கடத்தல், விற்பனை, அதனை உற்பத்தி செய்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது. அதன் அளவுக்கு ஏற்ப தண்டனை உறுதி செய்யப்படும்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில், போதைப்பொருள் கடத்திய 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 2003-ம் ஆண்டில் இருந்து இதுவரையிலான 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது அதிக எண்ணிக்கையாகும். 

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் சிலர் கூறி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வாரத்தில், அது விசாரிக்கப்படும் என தெரிகிறது. எனினும், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது என்பது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று சிங்கப்பூர் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து