முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் உயிரியல் பூங்காவில் வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      உலகம்
Puli 2023-12-29

Source: provided

பிரேசிலியா : பிரேசிலில் உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை சிங்கம் தாக்கி கொன்றது.

பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை காண நண்பர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர். அதில் மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஆர்வ மிகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு மரம் வழியாக கீழே இறங்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த ஒரு சிங்கம் அவரை தாக்கி இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து