முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      இந்தியா
Air

புதுடெல்லி, இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  விமான போக்குவரத்து துறை அமைச்சர்  மோகன் நாயுடு குறினார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எனவே கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து பேட்டியளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்  ராம் மோகன் நாயுடு கூறியதாவது;-

இந்த பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் உள்ளது என்று நான் சொல்ல முடியும். டெல்லி, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ விமான நிலையங்களில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும்கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலைமை சீராகி வருகிறது. மற்ற விமான நிலையங்களிலும் இன்றிரவுக்குள் பிரச்சினை முடிக்கப்படும். மேலும் இண்டிகோ இன்று முதல் குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது. 

விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அப்படியானால், தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து