முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      உலகம்
Trump

நியூயார்க், தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர். அதன்பின் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மத்தியஸ்த்தால் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 8-தேதி தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது:- தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்-கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன்.

இதன் பயனாக தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. 2 நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து