முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த சல்மான் கான்

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      சினிமா

மும்பை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் தனது பண்ணை வீட்டில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது குடும்பத்தினருடன் பன்வெல் பண்ணை வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தார். அங்கு அவர் தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். ரிதீஷ் தேஷ்முக், ஜெனீலியா டிʼசௌசா, மகேஷ் மஞ்ச்ரேகர், சங்கீதா பிஜ்லானி, ரமேஷ் டௌராணி, நிகில் திவேதி, ஹூமா குரேஷி, சஞ்சய் தத், ஆதித்யா ராய் கபூர் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் பண்ணை வீட்டில் பாதுகாப்பு வாகனங்கள் பின்னால் பின்தொடர்ந்தபடி சல்மான் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்ததாக, அபூர்வா லக்கியா இயக்கும் “பேட்டில் ஆஃப் கல்வான்” திரைப்படத்தில் சித்ராங்கதா சிங்குடன் இணைந்து சல்மான் கான் நடித்துள்ளார். இந்த படம், 2020ஆம் ஆண்டு இந்தியா–சீனா இடையே நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாகக் கொண்டதாகும். படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து