முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026      தமிழகம்
Fisher-Boat

ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு உள்ளது. ராமேசுவரம் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதனிடையே இந்த ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 - 70 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்தும், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து