முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026      இந்தியா
Jail

மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு தங்கி இருந்த 6 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். 

இந்தியாவில் சட்டவிரோதமாக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தானேவின் கார்கர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 6 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் விசா இன்றி தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்க வீடு வாடகைக்கு கொடுத்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து