எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழி தமிழ்மொழி என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்து பேசினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துவக்கி வைத்து துணை முதல்வர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் அதிக மாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று உலகின் பல நாடுகளில் இருந்து வாழுகின்ற நீங்கள் தமிழ் உணர்வோடு தமிழ் பற்றோடு தமிழ்நாட்டின் மீது இருக்க கூடிய பாசத் தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனை பேரும் வருகை தந்துள்ளீர்கள். வெளிநாடுகளில் நீங்கள் பல விதமான விழாக்களை பார்த்திருப்பீர்கள். கொண் டாடியிருப்பீர்கள். ஆனால் இது எதுவும் நம்முடைய தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஈடாகாது.
ஏனென்றால் பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில் அயலக தமிழக உறவுகள் உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பது என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என் குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது.
அயலகத் தமிழர் தினத்தை நம் திராவிட மாடல் அரசு ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் நான் தவறாமல் கலந்து வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான தலைப்பு 'தமிழால் இணைவோம்... தரணியில் உயர்வோம்...' என்ற மிகச் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழி தமிழ்மொழி. தமிழ் என்ற அடையாளத்துக்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் போட்டி போட முடியாது. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டிதான் நம் அத்தனை பேரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி.
அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்தால்தான் இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது. அந்த வகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அந்த பணி என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக அவசியமானது.
அதைவிட முக்கியம் அவர்களது நலன்களை பாதுகாக்கின்ற இந்த பணி என்பது மிக முக்கியம். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காகதான் சின்ன சின்ன வேலைகளை செய்ய நிறைய பேர் வெளி நாடு போவார்கள். அங்கு செட்டில் ஆவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழ் நாட்டில் இருந்து என்ஜினீ யர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகியிருக்கிறீர்கள்.
தொழிலாளியாக சென்ற காலத்தில் குடும்பத்தை இங்குவிட்டு விட்டு தனியாக அங்கு சென்றிருப்பீர்கள். இப்போது குடும்பத்தையும் அழைத்துச் சென்று அங்கேயே தங்குகிற அளவுக்கு பெரிய வேலைகளில் இருக்கிறீர்கள்.
இந்த வளர்ச்சி என்பது தானாக நடந்த வளர்ச்சி அல்ல. இந்த முன்னேற்றத்துக்கு பெயர்தான் திராவிட மாடல் இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும் போதுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான் நமது முதல்வர் அயலக தமிழர் நல வாரியத்தை முதன் முதலில் தொடங்கி வைத் தார். இதில் இன்று 32 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறீர்கள்
இதன் மூலம் அயலக தமிழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்மைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். உக்ரைன், ஈரான், இஸ் ரேல் போன்ற நாடுகளில் போர் நடந்தபோது அங்கிருந்த தமிழர்களை பாதுகாப்பாக நம்முடைய துறைதான் மீட்டு வந்தது. வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால் அதற்கு தீர்வுகாண இந்த துறை எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இங்கு தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் வைக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக உங்களது முயற்சியின் காரணமாக இன்றைக்கு நம்பர்-1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அந்த சாதனையில் உங்களது பங்கு மிகப்பெரியது. நம் அரசின் சார்பில் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். மக்களின் கனவுகளை கேட்டு அறியும் இந்த நிகழ்ச்சி போல், அயலக தமிழர்களும் உங்க கனவுகளை இந்த வாரி யத்தின் பொறுப்பாளர்க ளிடம், அமைச்சர் நாசரிடம் தெரியப்படுத்துங்கள். உங்களது தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நமது முதல்வர் நிச்சயம் தீட்டி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா: பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு பார்லி., உறுப்பினர்கள் எதிர்ப்பு
03 Mar 2026லாகூர், மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா என்று நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்; தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை - அரசு தகவல்
03 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சக
-
ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் 2 முக்கிய தலைவர்கள் கொலை
03 Mar 2026டெல் அவீவ், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்
-
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு
03 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து
03 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு.
-
மக்கள் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நாங்குநேரி சம்பவத்தில் விஜய் கேள்வி
03 Mar 2026சென்னை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு (நேற்று முன்த
-
போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வருகை
03 Mar 2026சென்னை, போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
-
எங்களிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன: அமெரிக்காவால் எப்போதும் போரிட முடியும்: அதிபர் ட்ரம்ப் திடீர் மிரட்டல்
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவிடம் வரம்பில்லாத அளவுக்கு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டும் வகையில் ஈரானுக்கு எச்
-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
03 Mar 2026சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.1,560 குறைந்தது
03 Mar 2026சென்னை, தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,480 குறைந்து விற்பனையானது.
-
காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி
03 Mar 2026புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்த
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 787 ஆனது
03 Mar 2026தெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி
03 Mar 2026காபூல், பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2026சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்
-
போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் தேர்வுகள் ஒத்திவைப்பு
03 Mar 2026மஸ்கட், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத
-
கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
03 Mar 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சென்னை, அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
03 Mar 2026சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்
-
நாடு திரும்பினார் பி.வி. சிந்து
03 Mar 2026அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: லெபனானில் 30 ஆயிரம் பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்
03 Mar 2026பெய்ரூட், லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி மாணவி கொலை
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெ
-
வருகிற 6-ம் தேதி முதல் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது
03 Mar 2026நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது.
-
ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
-
போருக்கு மத்தியில் 4.3 ரிக்டர் அளவில் ஈரானில் திடீர் நிலநடுக்கம்
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
லெபனானில் கூடுதலாக பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் தீவிரம்
03 Mar 2026டெல்அவீவ், லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத
-
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு
03 Mar 2026நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


