எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோர் முதலீட்டை ஈர்ப்பதற்காக இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் பயணம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, முதல்வராகப் பதவி வகிக்கும் மூத்த தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கட்டாயம் அரசியல் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான குழுவினருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும், அதற்கு உரிய காரணம் தெரிவிக்கவில்லை எனவும் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் பல்டேஜ் பன்னு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரீஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார் .ஆனால், அப்போதும் மத்திய அரசு அவருக்கு அரசியல் அனுமதி வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


