எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'திருநாள்' படத்தின் இசை வெளியீட்டு விழா
'திருநாள்' படத்தின் இசை வெளியீட்டு விழா
ஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் 'திருநாள்'. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. 'திருநாள்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது
"இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.
பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் 'சூர்யவம்சம்', 'திருப்பாச்சி' போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர். அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம். ஒரே மூச்சில் படத்தை முடித்தோம். பொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா? அப்படிப்பட்ட அனுபவசாலி அவர். படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர்.
இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் 'திருநாள்'.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஈ' 'தெனாவட்டு' படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.
நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார். பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை. ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார். முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். " என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ பேசும் போது
"என்னைக் குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்பார்கள். இதில் 'உருமாறிய கருமாரி' போல முழுக்க முழுக்க மாறி இருக்கிறேன். நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன். கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ். ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு ''என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது
'அம்பா சமுத்திரம் அம்பானி' என் முதல் படம். இது என் இரண்டாவது படம். 'திருநாள்' படத்தின் முழுக்கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகள் தேடினேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார். .இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி, சட்டை, நிறம் வேட்டி என எல்லாமும் மாற்றினோம். இதில் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி படம் தொடங்கியது முதல் படம் முடியும் வரை அதே உற்சாகத்துடன், பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்.'' என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம்.செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார் ஆகியோரும் பேசினார்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்
01 May 2025சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் : ரஜினிகாந்த்
01 May 2025மும்பை, காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
01 May 2025மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
இந்திய வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை
01 May 2025புதுடெல்லி, கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
-
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
01 May 2025சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
-
சென்னை எல்லை சாலைத் திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
01 May 2025திருவள்ளூர், திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
சென்னையில் அ.தி.மு.க. சார்பில் வரும் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 May 2025சென்னை, சென்னையில் வரும் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம்: விஜய் வேண்டுகோள்
01 May 2025சென்னை, யாரும் தனது வாகனத்திற்கு பின்னால் பின்தொடர்ந்து வர வேண்டாம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்கு குழிபறிப்போம்: திருமாவளவன்
01 May 2025சென்னை, உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம். சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்கு குழிபறிப்போம் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை
01 May 2025ஜெருசலேம், ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால் இஸ்ரேலில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்றவர் கைது
01 May 2025சென்னை, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
-
உழைப்பாளர்களக்கு விஜய் மே தின வாழ்த்து
01 May 2025சென்னை, உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல்.: விக்னேஷ் புதூர் விலகல்
01 May 2025காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.
-
ஆந்திராவில் பயங்கரம்: வீடு மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் பலி
01 May 2025நெல்லூர், ஆந்திராவில் வீடு மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
01 May 2025சென்னை, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எந்த மைதானத்திலும் சேஸிங் செய்வது பிடிக்கும்: ஷ்ரேயாஸ்
01 May 2025சென்னை: பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை: மதுரையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
01 May 2025இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.