முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் சாம்பல்புதன் நோன்பு துவக்கம்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்.- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில், கிறிஸ்தவர்களின் 40 நாள்  தவக்காலம் தொடங்கியதையட்டி சாம்பல் புதன் சடங்கு நிகழ்ச்சி விழா நடந்தது. கடந்த ஆண்டு அனைத்து கிறிஸ்துவர்களின் வீடுகளில் உள்ள பழைய குருத்தோலைகளை ஆலயத்தில் கொண்டுவந்து கொடுத்து அதை எரித்து சாம்பாளாக்கி அதிலிருந்துவரும் சாம்பளை அர்ச்சித்து புனிதபடுத்தி கிறிஸ்தவர்களின்  நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து அப்போது "மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்று பங்குத்தந்தையர்கள் லாரன்ஸ்,தாஸ்,ஜெயராஜ் ஆகியோர் திருப்பலியை நடத்தினார். இதன் மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல, தவறு செய்வோர் தன்னை திருத்திக்கொள்ளவும் அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும்.இந்த தவக்காலத்தில் தவம்,தர்மம்,ஜெபம் செய்தால் நம் வாழ்வில் சந்தோஷம் நிலைத்து இருக்கும் என்றார்.
 
தொடர்ந்து  ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும்  ஏசுவின் இறப்பை நினைவுபடுத்தும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும், இந்த 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். வீடுகளில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது,அன்னதானம் வழங்குவர்.இந்த தவக்காலத்தின் கடைசி வாரமான ஏப்ரல் 13&ந்தேதி புனித வியாழன் அன்று ஏசுவின் கடைசி விருந்தும், ஏப்ரல் 14&ந்தேதி புனித  வெள்ளியில் ஏசுவின்  சிலுவை மரண வழிபாடுகளும், ஏப்ரல் 15&ந்தேதி புனித  சனி அன்று இரவில் ஈஸ்டர் வழிபாடும், ஏப்ரல் 16&ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவார்கள். செந்துறை பங்கைச்சேர்ந்த கிளைப்பங்குகள் நல்லபிச்சன்பட்டி, பழனிபட்டி,சொறிப்பாறைபட்டி,ஒத்தக்கடை, பாறைப்பட்டி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி,குடகிபட்டி ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 19 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 19 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago