முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

பிறந்த குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை

பிறந்த குழந்தைள் வீறிட்டு அழுவதை நாம் கேட்டிருப்போம். பசியின் போதும், தாயின் துணை தேடியும் பிறந்த குழந்தைகள் அழுவது வழக்கம். ஆனால் நமக்கு இதுவரை தெரியாத ஒன்று என்ன தெரியுமா.. அவ்வாறு அழுதாலும் அவர்களுக்கு கண்ணீர் வருவதில்லை என்பதுதான். ஏன் தெரியுமா.. பிறந்த குழந்தையின் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. கண்ணீர் சுரப்பிகள் 4 முதல் 12 வாரங்களுக்கு பிறகே வளரத் தொடங்கும். பிறகென்ன அதற்கு பிறகு கண்ணீர் மழைதான்.

தூக்கம் கெடும்

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

வெப்பத்தை தணிக்க

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின், புதிய முயற்சியாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஏர்போர்ட்

உலகிலேயே கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமான முறையில் அமைந்துள்ள ஏர்போர்ட் எங்குள்ளது தெரியுமா.. அது வேறெங்கும் இல்லை.  இந்தியாவில்தான்.. அகத்தி விமான நிலையம் - லட்சத் தீவுகள்- விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி  விமான தளத்தின் பிரம்மாண்டம். இந்தியாவின்  லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம். விமானத்தில் இருந்து பார்க்கும் போது ரன்வே கடலில் மிதப்பது போல காட்சி அளிக்கும் அனுபவம் மிகப் பெரிய அனுபவம். 1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.

மதசடங்கால் வந்தவினை

தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை ’ஒம்சின்’, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டது. பின் இதனை சோதனை செய்து பார்த்ததில் இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அறுவைசிகிச்சை மூலம் ஆமையின் வயிற்றில் இருந்த சுமார் 5 கிலோ அளவு நாணயங்கள் எடுக்கப்பட்டன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை வயிற்றில் சுமந்துகொண்டுதான் அந்த ஆமை வாழ்ந்து வந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய மத சடங்கிற்காக விட்டெறிந்த நாணயங்களை இந்த ஆமை முழுங்கியதுதான் இதற்கு காரணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago