முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

‘லைவ் லொகேஷன்’

பயனாளர்களுக்கு  இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் ‘லைவ் லொகேஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியுமாம்.

வெள்ளத்தில் மூழ்கியும் அணையாமல் தீபம் எரியும் கோயில்

நாமக்கல் மாவட்டம்  மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

புதிய முயற்சி

முன்பு சல்பர் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்த நிலையில், கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

ஆச்சரியம் ஆனால் உண்மை

பிரிட்டனில் ஒரு ஆண், கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறார்.  உலகம் உருவான நாள் முதல் குழந்தைக்கு தந்தை என ஆண் இருந்து வருகிறார். குழந்தையை கருவில் சுமக்கும் பெண்ணே தாயாக இருந்து வருகிறார். இந்த நிகழ்வை மாற்றும் விதமாக  இந்த பிரிட்டனில் ஆண் ஒருவர், கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இவர்  கடந்த 3 ஆண்டுகளாக சட்ட பூர்வமாக ஆணாக வாழ்ந்து வருகிறார். இவர்  பெண் பாலினத்தில் இருந்து ஆண் பாலினமாக மாறும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர். இவர் தனது வயிற்றில் கருவை சுமந்து குழந்தை பெறும் போது குழந்தையை தனது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த முதல் பிரிட்டன் ஆண் என்ற சாதனையை படைப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago