முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

முகம் பார்க்கும் கண்ணாடி முதன்முதலில் எப்போது தோன்றியது?

1835 இல். ஜெர்மனியைச் சேர்ந்த வேதியிலாளர் ஜஸ்டுஸ் வோன் லைபிக் என்பவர்தான் கண்ணாடியின் பின்புறம் சில ரசாயன கலவையை பூசுவதன் மூலம் அசலான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியவர். இவர்தான் அமோனியாவில் சில்வர் நைட்ரேட்டை கலந்து கண்ணாடியின் பின்புறம் பூசி அதன் எதிரொளிப்பு தன்மையை உலகுக்கு காட்டியவர். அப்போது முதல் நாம் நமது முகங்களை இடைவிடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்