எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலையணை இல்லாமல் உறங்குவது சிலருக்கு மிகவும் கடினமான காரியம். சிலர் தலையணையை தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும். ஒருசிலர் படுக்கையறையில் தலையணை குவிந்திருக்கும். சிலர் 4-5 தலையணைகளை தலைக்கு வைத்து உட்கார்ந்து தூங்குவது போல் தூங்குவார்கள். இப்படி தூங்குகிற அனைவருக்கும் முதுகுவலி பிரச்சனை இருக்கும். காலையில் இவர்கள் எழும் பொழுது முதுகுவலி வலியுடன்தான் எழுவார்கள்.
இப்படி நாம் தலையணை வைத்து படுத்து உறங்குவதால் மேலும் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தலையணை வைத்து உறங்குவது என்பது உங்களுக்கு சுகமானதாக தெரியலாம் ஆனால் அது உங்கள் உடலுக்கு ஆரோக்கிய சீர்கெட்டை தரும்.
தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடம் இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது.
ஆரம்பத்தில் ராஜாக்கள், பணக்காரர்கள் என்று சிலர் மட்டுமே உபயோகபடுத்தி உள்ளனர் . ஆனால், கடந்த 50, 60 ஆண்டுகளில் தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகி விட்டனர். இன்று அது வளர்ந்து தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பிடித்துள்ளது.
படுக்கும்போது எக்காரணம் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்து சமமான தரையில் உறங்க வேண்டும்.நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும்.
உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.
இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது. கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம்.
உடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபடலாம். இதனால் உறக்கம் கெடலாம்.
குறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், ‘வெர்டிகோ’ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது.
பஞ்சு மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும்.
பின் அங்கே உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு தொடங்கி பலவிதமான பிரச்னைகள் வரக்கூடும்.
தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் கெடுதல்கள் உண்டாகலாம்.
தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும். தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும்.
எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைகள் தொடங்கி, வளரும் குழந்தைகள் என யாருக்கும் தலையணை வைத்து பழக்கப்படுத்த வேண்டாம். அதனால், இளம் பிஞ்சுகளின் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம். தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வெளிவருவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டாகும். இதனால் ஏற்படக்கூடிய அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட வெப்பநிலை இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.
குழந்தைகளுக்கு மென்மையான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.
ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுபோல கண்டிப்பாக தலையணை வைத்து படுக்கவேண்டும் என்பவர்கள் ஒருசில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்
நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.
ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும். குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.
நீங்கள் சுகமாக உறங்க வேண்டுமா, உங்களுக்கு குறைந்தது இரண்டு தலையணைகள் தேவை. ஒன்று உங்கள் தலைக்கு ஒன்று உங்கள் கால்களுக்கு இடையே வைத்துக்கொள்ள உதவும். உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பது ஆறுதல் தரும், மற்றும் முழங்கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தத்தை நீக்குகிறது
முழங்கால்களுக்கு இடையில் ஒரு உறுதியான தலையணையை வைத்து தூங்குங்கள். முக்கியமாக இந்த தலையனை உங்கள் முழங்கால்களில் இருந்து கணுக்கால் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் முழங்கால்கள் மற்றும் கணுக்கால் சரியாக ஒரே நிலையில் இருக்கும், என்பதால் சீராக தூக்கம் வரும்.
உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்குவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுகிறது. இது உங்கள் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது, இது உங்கள் உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. அதோடு முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது. இதனால் உங்கள் முதுகு வலி குறையும்.
தலையணை ஆரோக்கியமான தூக்கத்தையும் ஊக்குவிக்கும், மேலும் உடல் வலியைப் போக்கவும் உதவும். மேலும் உங்கள் முதுகெலும்பை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி, காலையில் சரியாக எழுந்திருப்பதையும் உறுதி செய்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.